கிழக்குப் பல்கலைக்கழக மலையக மாணவர் ஒன்றியத்தால் மலையக தியாகிகள் தினம் மற்றும் மலையக 200 வருட பூர்த்தியின் நினைவூட்டலும் நேற்றையதினம் (24) மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது மலையக தியாகிகளுக்கான பொதுச்சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தியதோடு மலையகத்தின் அடிப்படை உரிமைகள் மற்றும் எதிர்கால இலக்குகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மாற்றத்தை ஏற்க மனம் மறுக்கிறது. மலையகம் என்ற அடையாளத்தை இழந்து விடுவோமோ என்று தேயிலைத் தோட்டத்தில் வளர்ந்த கள்ளிச் செடிகளாய் இருநூறு ஆண்டுகள் இன்றோடு கடந்த நிலையில்.

மலையக தமிழ் மாணவர் ஒன்றியம்
கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கை.


