Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபரும் பாதுகாப்புச் செயலாளரும் சிறையில் அடைப்பு!

July 31, 2026

அஸ்வெசும ஊழல் மோசடி: நோர்வூட் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இருவர் அதிரடி கைது!

July 31, 2026

பிறரின் பொதிகளை ஏற்றிச் செல்வதில் விழிப்புடன் இருக்கவும்: இலங்கை சுங்கத் திணைக்களம் விசேட எச்சரிக்கை

July 31, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஐ.எம்.எவ். அமுல்படுத்துவதற்கான தீர்மானம் – இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு
இலங்கை

ஐ.எம்.எவ். அமுல்படுத்துவதற்கான தீர்மானம் – இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு

ThanaBy ThanaApril 27, 2023Updated:April 27, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானத்துக்கு தமது கட்சி ஆதரவாக வாக்களிக்கும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை, அமைச்சர் மனுஷ நாணயக்கார சபையில் ‘புலி’ (கொட்டியா) என விளித்ததையும் அமைச்சர் கண்டித்துள்ளார்.

கொழும்பில் அமைச்சில் (27.04.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் ஜீவன் மேலும் கூறியவை வருமாறு,

” பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி அவசியம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்தது. அந்தவகையில் ஐ.எம்.எவ். அமுல்படுத்துவதற்கான தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் நாளை (28) வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. அரச பங்காளிக்கட்சி என்ற வகையில் அதற்கு ஆதரவு வழங்கப்படும்.

ஐ.எம்.எவ். கடன் குறித்து சிலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். ஆனால் ஐ.எம்.எவ். அங்கீகாரம் கிடைத்ததால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள, ஏற்படப்போகும் நன்மைகள் பற்றி எவரும் கதைப்பதில்லை. எது எப்படி இருந்தாலும் நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதி முன்னெடுக்கும் பொருளாதார திட்டங்களுக்கு நிச்சயம் ஒத்துழைப்பு வழங்கப்படும்.

அதேபோல பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் இதற்கு ஆதரவு வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிரணியில் உள்ள ஏனைய கட்சிகளும் ஆதரவு வழங்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

அதேவேளை,  அதி உயர் சபையாக கருதப்படுகின்ற நாடாளுமன்றத்தில் எதிரணி உறுப்பினரை (சாணக்கியனை) அமைச்சர் (மனுஷ நாணயக்கார) கொட்டியா (புலி) என விமர்சித்திருந்தார். இது தவறாகும். நாடாளுமன்றத்தில் சபை நாகரீகம் பின்பற்றபபட வேண்டும். ஒரு உறுப்பினரின் இனத்தை வைத்து அவரை விமர்சிப்பது ஏற்புடைய விடயம் அல்ல.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிக்கு ஆளுநர் பதவியை வழங்குமாறு நாம் கோரிக்கை விடுக்கலாம். அது எந்த மாகாணம் என்பதை ஜனாதிபதியே தீர்மானிப்பார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் சிறந்த நிர்வாகி. அவர் மாகாண துணை முதல்வராக செயற்பட்டுள்ளார். மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கியுள்ளார்.  மலையக தமிழர் ஒருவருக்கு ஆளுநர் பதவி கிடைப்பது மகிழ்ச்சி. இதற்கு அனைவரும் ஆதரவு வழங்குவார்கள் என நம்புகின்றேன்” – என்றார்.

ஊடக செயலாளர்

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபரும் பாதுகாப்புச் செயலாளரும் சிறையில் அடைப்பு!

    July 31, 2026

    பிறரின் பொதிகளை ஏற்றிச் செல்வதில் விழிப்புடன் இருக்கவும்: இலங்கை சுங்கத் திணைக்களம் விசேட எச்சரிக்கை

    July 31, 2026

    பாடசாலை மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ஆசிரியர் பண்டாரவளையில் கைது! தொலைபேசியில் சிக்கிய அதிர்ச்சி புகைப்படங்கள்

    July 31, 2026

    தெஹிவளை உணவகத்தில் துப்பாக்கியைக் காட்டி கொள்ளை: 2 பொலிஸ் சார்ஜன்ட்கள் உட்பட மூவருக்கு 9 ஆண்டுகள் கடூழியச் சிறை!

    July 31, 2026
    Editors Picks

    மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபரும் பாதுகாப்புச் செயலாளரும் சிறையில் அடைப்பு!

    July 31, 2026

    அஸ்வெசும ஊழல் மோசடி: நோர்வூட் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இருவர் அதிரடி கைது!

    July 31, 2026

    பிறரின் பொதிகளை ஏற்றிச் செல்வதில் விழிப்புடன் இருக்கவும்: இலங்கை சுங்கத் திணைக்களம் விசேட எச்சரிக்கை

    July 31, 2026

    பாடசாலை மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ஆசிரியர் பண்டாரவளையில் கைது! தொலைபேசியில் சிக்கிய அதிர்ச்சி புகைப்படங்கள்

    July 31, 2026

    மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபரும் பாதுகாப்புச் செயலாளரும் சிறையில் அடைப்பு!

    July 31, 2026

    அஸ்வெசும ஊழல் மோசடி: நோர்வூட் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இருவர் அதிரடி கைது!

    July 31, 2026

    பிறரின் பொதிகளை ஏற்றிச் செல்வதில் விழிப்புடன் இருக்கவும்: இலங்கை சுங்கத் திணைக்களம் விசேட எச்சரிக்கை

    July 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.