Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.

August 2, 2026

நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை தொடரும்

August 2, 2026

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை!

August 2, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியம் – ஜனாதிபதி தெரிவிப்பு.
இலங்கை

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியம் – ஜனாதிபதி தெரிவிப்பு.

ThanaBy ThanaApril 28, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

விவசாயத்துறை மற்றும் பெருந்தோட்டப்பகுதி வாழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

பெருந்தோட்ட மறுசீரமைப்பு குழுவுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

காணிப் பிரச்சினை உட்பட விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

அதேபோல் பெருந்தோட்ட நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 10 – 15 வருடங்களுக்குள் பெருந்தோட்ட நிறுவனங்களின் குத்தகைக் காலம் நிறைவடைய உள்ள நிலையில், விவசாயத்துறையை நவீன மயப்படுத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்ல அரசாங்கம் முற்படுமாயின் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கான புதிய குத்தகை வசதிகளை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும் அனைத்து நிறுவனங்களினதும் செயற்பாடுகளும் வரவேற்கத்தக்க வகையில் காணப்படவில்லை என்பதால் குத்தகைக் காலத்துக்கான புதிய அடித்தளம் ஒன்றை கட்டமைக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெருந்தோட்ட மறுசீரமைப்பு குழுவிற்கு பணிப்புரை விடுத்தார்.

பெருந்தோட்ட நிறுவனங்களின் செயற்பாடுகளை மதிப்பிடுதல் மற்றும் புதிய குத்தகை கட்டமைப்பை உருவாக்குவதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பை புதுபிக்குமாறும் ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தல் விடுத்தார்.

காணிகளை பெற்றுக்கொண்டதன் பின்னர் அரசாங்கத்தின் அனுமதியின்றி தமது பங்குகளை விற்பனை செய்வதற்கு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு இடமளிக்கக்கூடாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அத்தோடு, குறித்த இடங்களில் மாணிக்ககல் அகழ்வது பாரிய பிரச்சினை என்பதால் இதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பெருந்தோட்ட வீட்டுப் பிரச்சினை மற்றும் தேயிலை, இறப்பர், தெங்கு உற்பத்தி சார்ந்த பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டது.

தொழிலாளர்களுக்கு காணிகளை குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான வேலைத்திட்டம் குறித்து அவதானம் இங்கு செலுத்தப்பட்டதோடு, காணி மீட்பு ஆணைக்குழுவின் பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அதேபோல் ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்தும் ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை தொடரும்

    August 2, 2026

    ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை!

    August 2, 2026

    மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் ..

    August 2, 2026

    மஹர சிறைச்சாலை மோதல்: ராகம பகுதியில் உடனடி பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்

    August 1, 2026
    Editors Picks

    மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.

    August 2, 2026

    நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை தொடரும்

    August 2, 2026

    ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை!

    August 2, 2026

    மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் ..

    August 2, 2026

    மத்திய மலைநாட்டில் தொடர்ந்து இடைவிடாது கடும் காற்றுடன் கூடிய மழை.

    August 2, 2026

    நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை தொடரும்

    August 2, 2026

    ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை!

    August 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.