கொழும்பின் பல பகுதிகளிலும் புறநகர்ப் பகுதிகளிலும் தற்போது நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, பத்தரமுல்ல, கோட்டே மற்றும் கடுவலை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பில் தற்போது கொழும்பு 04, 05, 07 மற்றும் 08 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் இன்று இரவு 9.00 மணி வரை நீர் விநியோகம் அமுல்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளது.
அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அவசர பராமறிப்பு பணிகள் காரணமாகவே நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
