பலாங்கொடை தும்பகொடை பிரதேசத்தில் நேற்று இரவு (29.04)ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் பலி.
ஜிப் வண்டி ஒன்று பாதையில் சென்ற ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் பலாங்கொடை லங்காபரன தோட்டத்தில் வசிக்கும் 54 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பலங்கொடை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த ஜிப் வண்டியின் சாரதியை பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.மேலதிக விசாரணைகளை பலாங்கொடை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
