Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கொழும்பில் ஆகஸ்ட் 29இல் பிரமாண்ட ‘இயுலிம்’ கொரிய கலாச்சாரத் திருவிழா: ‘1+3’ கல்வித் திட்டமும் அறிமுகம்!

August 1, 2026

ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க பத்திரகே தங்கப் பதக்கம் வென்று சாதனை

August 1, 2026

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபரும் பாதுகாப்புச் செயலாளரும் சிறையில் அடைப்பு!

July 31, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சஜித்துடன் பயணத்தை தொடர்வதற்கு நான் தயாரில்லை – வடிவேல் சுரேஷ் எம்.பி
இலங்கை

சஜித்துடன் பயணத்தை தொடர்வதற்கு நான் தயாரில்லை – வடிவேல் சுரேஷ் எம்.பி

ThanaBy ThanaMay 1, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

(க.கிஷாந்தன்)

” பதுளை, மடுல்சீமை மக்களிடம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மன்னிப்புகோர வேண்டும். அவ்வாறு இல்லையேல் ஐக்கிய மக்கள் சக்தியுடன் பயணத்தை தொடர்வதற்கு நான் தயாரில்லை.”  – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

தொழிலாள் தேசிய சங்கத்தின் மே தின கூட்டம் பதுளையில் இன்று (01.05.2023) நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தலைமைதாங்கி உரையாற்றுகையிலேயே வடிவேல் சுரேஷ் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் தேசிய கொள்கைத்திட்டம் பற்றி பேசப்படுகின்றது. அவ்வாறு கொள்கைத் திட்டங்கள் வகுக்கப்படும் போது மலையக பெருந்தோட்ட மக்கள் ஓரங்கட்டப்படுகின்றனர். இந்நிலைமையை இனியும் அனுமதிக்க முடியாது. எமது மக்களும் இலங்கை பிரஜைகள்தான். அவர்களுக்கு எதற்காக ஓரவஞ்சணை காட்டப்படுகின்றது? இலங்கை மக்கள் அனுபவிக்கும் அத்தனை உரிமைகளும் எமது மக்களுக்கும் வேண்டும்.

எமது மக்கள் பயங்கரவாதிகள் அல்லர். பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவில்லை. நாட்டின் வன்முறைகளில் ஈடுபட்டதில்லை. நாடு மேம்பட உழைத்த அவர்களுக்கு ஏன் புறக்கணிப்பு? இன்னும் காணி உரிமை அற்றவர்களாக வாழ்கின்றனர்.

எங்கள் மக்களுக்கு உண்ண உணவில்லை, பாதுகாப்பாக வாழ காணி இல்லை. மக்கள் இப்படி தவிக்கையில் எனக்கு கட்சி, சின்னம் என்பன முக்கியம் இல்லை.

தற்போதைய சூழ்நிலைக்கமைய நாட்சம்பளமாக 3 ஆயிரத்து 250 ரூபா வழங்கப்பட வேண்டும். பேராதனை பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. எனவே, அந்த தொகையை வழங்குமாறு கம்பனிகளுக்கு ஜனாதிபதி கட்டளையிட வேண்டும்.

அதேவேளை, எமது மக்களை செல்லாக்காசாக கருத வேண்டாம் என எமது கட்சி தலைவர் சஜித்திடம் கூறுகின்றேன். அவர் மடுல்சீமை கூட்டத்துக்கு வரவில்லை. ஆக மடுல்சீமைக்கு வந்து அவர் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். இல்லையேல் சஜித்துடன் எனது பயணம் தொடராது.” – என்றார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கொழும்பில் ஆகஸ்ட் 29இல் பிரமாண்ட ‘இயுலிம்’ கொரிய கலாச்சாரத் திருவிழா: ‘1+3’ கல்வித் திட்டமும் அறிமுகம்!

    August 1, 2026

    ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க பத்திரகே தங்கப் பதக்கம் வென்று சாதனை

    August 1, 2026

    மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபரும் பாதுகாப்புச் செயலாளரும் சிறையில் அடைப்பு!

    July 31, 2026

    பிறரின் பொதிகளை ஏற்றிச் செல்வதில் விழிப்புடன் இருக்கவும்: இலங்கை சுங்கத் திணைக்களம் விசேட எச்சரிக்கை

    July 31, 2026
    Editors Picks

    கொழும்பில் ஆகஸ்ட் 29இல் பிரமாண்ட ‘இயுலிம்’ கொரிய கலாச்சாரத் திருவிழா: ‘1+3’ கல்வித் திட்டமும் அறிமுகம்!

    August 1, 2026

    ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க பத்திரகே தங்கப் பதக்கம் வென்று சாதனை

    August 1, 2026

    மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபரும் பாதுகாப்புச் செயலாளரும் சிறையில் அடைப்பு!

    July 31, 2026

    அஸ்வெசும ஊழல் மோசடி: நோர்வூட் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இருவர் அதிரடி கைது!

    July 31, 2026

    கொழும்பில் ஆகஸ்ட் 29இல் பிரமாண்ட ‘இயுலிம்’ கொரிய கலாச்சாரத் திருவிழா: ‘1+3’ கல்வித் திட்டமும் அறிமுகம்!

    August 1, 2026

    ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க பத்திரகே தங்கப் பதக்கம் வென்று சாதனை

    August 1, 2026

    மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபரும் பாதுகாப்புச் செயலாளரும் சிறையில் அடைப்பு!

    July 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.