லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைவர் கே.எல்.ராகுல் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.

இதனால் அவர் எதிர்வரும் ஜூன் மாதம் லண்டனில் ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை இழக்க நேரிடலாம் என்றும் கூறப்படுகின்றது.
எவ்வாறெனினும் அவரது மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் அதனை தீர்மானிக்கும்.
இந்நிலையில் ராகுலுக்கு பதிலாக மாற்று வீரரை தேடுவதற்கான முயற்சியில் லக்னோ அணி இன்னும் கவனம் செலுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் அவர்களுக்கு இன்னும் நான்கு லீக் போட்டிகள் மாத்திரம் எஞ்சியுள்ளன.
மேலும் அவர்கள் பிளேஆஃப்க்குத் தகுதி பெற்றால் இன்னும் அதிகமான ஆட்டங்களில் விளையாடலாம்.
ராகுலுக்குப் பதிலாக க்ருனல் பாண்டியா ஏற்கனவே அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
