கடந்த 2023.04.22 அன்று சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் SOS, CSI, மற்றும் பென்தர் ஆகிய சிறுவர் இல்லங்களின் ஏற்பாட்டில், புதுவருட கொண்டாட்ட விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனை முன்னிட்டு நுவரெலியா மாவட்ட பொலிஸ் பிரிவின் வேண்டுகோளுக்கிணங்க, லங்கா விஷன் எக்சன் பவுண்டேசன் நிறுவனமானது, அச்சிறுவர்களுக்கான 45 பாடசாலை தோள் பைகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் லங்கா விஷன் எக்சன் பவுண்டேசன் நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி சதீஷ் கண்ணா,நுவரெலியா மாவட்ட பொலிஸ் அதிகாரி, சிறுவர்கள், மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
