யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைக் கைதி ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
உடுவில் பகுதியைச் சேர்ந்த 32 வயதான யோகராசா கஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
உயிரிழந்தவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
