வடமேல் மாகாணம்- புத்தளம் மாவட்டம், சிலாபம், முன்னேஸ்வரம் குருணாகல் வீதி, அருள்மிகு நல்ல விநாயகர் திருக்கோயில்
தலை தாழா நிலை தந்து தாங்கிநிற்கும் விநாயகரே
திடங்கொண்ட மனம் தந்து எமக்கருள வேண்டுகிறோம்
துன்பங்கள் அண்டாமல் துடைத்தெறிய வேண்டும்
முன்னேஸ்வரப் பதியமர்ந்த நல்ல விநாயகப் பெருமானே
குற்றங்கள் பொறுத்து நலம் வழங்கும் விநாயகரே
குவலயத்தில் அமைதியையே அருளிடவே வேண்டுகிறோம்
இன்பநிலை தந்தெம்மை அரவணைக்க வேண்டும்
முன்னேஸ்வரப் பதியமர்ந்த நல்ல விநாயகப் பெருமானே
ஆற்றலுடன் முன்செல்ல அருளளிக்கும் விநாயகரே
ஆதரவு தந்தெம்மை வாழவைக்க வேண்டுகிறோம்
நிம்மதியை நாமென்றும் அனுபவிக்க வேண்டும்
முன்னேஸ்வரப் பதியமர்ந்த நல்ல விநாயகப் பெருமானே
எங்கும் என்றும் எமைக்காக்கும் எங்கள் விநாயகரே
ஏற்றமிகு வாழ்வு தந்து எமை உயர்த்த வேண்டுகிறோம்
எதிர்காலம் வளம் பெற்று சிறப்படைய வேண்டும்
முன்னேஸ்வரப் பதியமர்ந்த நல்ல விநாயகப் பெருமானே
என்றும் உடனிருந்து எமக்கருளும் விநாயகரே
எதிர்த்து வரும் தீமைகளைத் தடுத்திடவே வேண்டுகிறோம்
பயமில்லா நல்ல வாழ்வைப் பெற்றிடவே வேண்டும்
முன்னேஸ்வரப் பதியமர்ந்த நல்ல விநாயகப் பெருமானே
நல்லருளைத் தந்தெம்மை ஆட்சிகொள்ளும் விநாயகரே
நேர்வழியில் நாம் வாழ வழி அமைக்க வேண்டுகிறோம்
நீதி நெறி தவறாத உயர் வாழ்வு நாமடைய வேண்டும்
முன்னேஸ்வரப் பதியமர்ந்த நல்ல விநாயகப் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.