மாத்தளை – ஹுன்னஸ்கிரிய பகுதியில் சிறுவர்கள் யாசகம் (பிச்சை) பெறுவது சடுதியாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
ஹுன்னஸ்கிரிய பகுதியானது, அதிகளவாக சுற்றுலா பயணிகள் வருகைத் தரும் பகுதியாக காணப்படுகின்றது.
இங்கு வாகனங்களில் வருகைத் தரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை பின்தொடர்ந்து, சிறுவர்கள் யாசகம் (பிச்சை) பெறுவதை அவதானிக்க முடிகின்றது.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள பெருந்தோட்ட பகுதியைச் சேர்ந்த சிறுவர்களே அதிகளவில் யாசகம் (பிச்சை) பெறுவதை அங்கு சென்ற செய்தியாளர் குழுவினால் அவதானிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளமை, சிறுவர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளமை போன்றவற்றுக்கு மத்தியில், சிறுவர் யாசகர்கள் அதிகரித்துள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.
சிறுவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில், எதிர்காலத்தில் நாடு பல்வேறு அசாதாரண சவால்களை எதிர்நோக்க நேரிடும் என்பதில் சந்தேகம் இல்லை.
நன்றி-ட்ரூ சிலோன்