கொத்மலை வலயமட்ட கரப்பந்தாட்ட போட்டியில் 16,18 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் அணியினர் முறையே 1ம், 2ம் இடங்களை பிடித்து இறம்பொடை இந்து கல்லூரி சார்பாக மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார்கள்.

இவ்வாறு வெற்றிப் பெற்ற மாணவர்களை அதிபர் உட்பட பாடசாலை சமூகம் பாராட்டி வருகின்ற நிலையில் இது போன்ற தொடர் வெற்றிகளை பாடசாலைக்கு பெற்றுக்கொடுக்க காரணமாக இருக்கும் பயிற்றுவிப்பாளர் பி . திலக்சன் அவர்களையும் பாராட்டி, வெற்றி பெற்ற மாணவ செல்வங்களுக்கும் மலையகம்.lk சார்பாக வாழ்த்துகிறோம்.
