பிரித்தானியாவில் நீண்டகாலமாக இயங்கி வரும் மலையக மக்கள் ஒன்றியத்தின் ஒன்று கூடல் நிகழ்வு கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் திகதி Aylesbury, Roman Park மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் ஒன்றியத்துக்கு புதிய அங்கத்தவர்களை தெரிவுசெய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கடந்த 17 வருடங்களாக சேவையாற்றிய ஐயர்தேவன் முத்து, சுப்பிரமணியம் ஆகியோரை B.A.காதர் மற்றும் அருளீஸ்வரன் ஆகியோர் கௌரவித்தனர்.
மேலும் நிகழ்வில் புதிய நிருவாக குழு தெரிவு செய்யப்பட்டது,அதன் அடிப்படையில் புதிய தலைவராக சிவசங்கரும் செயலாளராக திருமதி. மதிவதனாவும் பொருளாளராக பாலசேகரும் தேர்வுசெய்யப்பட்டனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
பிரித்தானிய மலையக மக்கள் ஒன்றியமானது பிரித்தானியாவில் பதியப்பட்டுள்ளதோடு மலையக மக்களின் கல்வி வளர்ச்சிக்காக நீண்டகாலமாக செயலப்பட்டு வரும் அமைப்பாகவும் இருக்கின்றது.