கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சுகாதார தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்தப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட மயக்க மருந்தில் ஏற்பட்ட சிக்கலால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக அத்தொழிற்சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
தேசிய கண் வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண் ஒருவர் சத்திரசிகிச்சையின் பின்னர் சுயநினைவுக்கு வராமலேயே உயிரிழந்துள்ளதாக நேற்று (5) தகவல்கள் தெரிவித்துள்ளன.
இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
