கொழும்பு- கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிக்குட்பட்ட நாகலகம்வீதி பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (5) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞர் 25 வயதானவர் என்றும் அவர், குறித்த பகுதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, அவரைப் பின்தொடர்ந்து சென்ற சிலர் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது அந்த தாக்குதலிலிருந்து தப்புவதற்கு அருகிலிருந்த வர்த்தக நிலையமொன்றுக்குள் இளைஞர் ஓடிய போது, சந்தேகநபர்கள் இளைஞர் மீது கூரிய ஆயதத்தால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து காயமடைந்த இளைஞர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
