பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உடகம பகுதியில் சிலர் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபடுவதாக பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் ஸ்தானத்திற்கு விரைந்த பசறை பொலிஸார் சந்தேகத்துக்கிடமான இடத்தை சுற்றிவளைத்த போது மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இருவரை இன்று மாலை கைது செய்துள்ளனர்.
33,39 வயதுடைய எல்டப் கிகிரிவத்தை மற்றும் திவுலாப்பிடிய பகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களே பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணிக்க கல் அகழ்விற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்கள் இருவருக்கும் எதிராக வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
