படங்கள்- கெளசல்யா
தலவாக்கலை, வட்டகொடையில் இருந்து மடக்கும்புர வரையிலும் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ், துனுக்கே தெனிய, கிரிதியெட்டி பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதனால் அந்த பஸ்ஸில் பயணித்த 12 பேர் காயமடைந்துள்ளனர் என பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து இடம்பெற்ற போது, அந்த பஸ்ஸில் 25 பேர் பயணித்துள்ளனர் என்றும் காயமடைந்தவர்கள் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.
வட்டகொடை தோட்டத்தில் வேலைச் செய்வதற்காக வேவஹேன பிரதே்தில் இருந்து ஒருதொகுதி தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு அவர்களுடைய வீடுகளுக்கு மீண்டும் அழைத்து வந்துக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
நன்றி தமிழ்மிரர்

