பொலனறுவை – மனம்பிட்டிய கொத்தலிய பாலத்திற்கு அருகில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் விபத்தில் காயமடைந்த 20க்கும் அதிகமானவர்கள் மனம்பிட்டிய மற்றும் பொலனறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கதுருவலையில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பேருந்து ஒன்றே, இன்றிரவு விபத்துக்குள்ளானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
