மஸ்கெலியா நிருபர்.16.07.2023.
இன்று காலை வேளையில் மல்லியப்பூ சந்தியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் இறந்து கிடந்த நபரை அடையாளம் கண்டு உள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலைய அதிகாரி ரஞ்ஜன் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த பகுதிக்கு ஹட்டன் பொலிஸ் நிலைய கைரேகை நிபுணர்கள் பதில் நீதவான் சென்று பார்வை இட்ட பின்னர் உடலம் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதென அந்த அதிகாரி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் அவ்வாறு இறந்த நிலையில் காணப்பட்ட நபர் பொகவந்தலாவ சுல்லாங்கந்தை தோட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் எனவும் வயது 58 உடையவர் என்றும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் இறந்த நபர் பொகவந்தலாவ சென் மேறிஸ் கல்லூரியில் கல்வி பயின்றவர் எனவும் கடந்த சில மாதங்களாக இவர் வீட்டில் இருந்து வெளியேறி ஹட்டன் நகரில் யாசகம் செய்து உள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனை மேற்கொண்ட பின்னர் உடலம் அவரது மனைவியிடம் ஒப்படைக்க உள்ளது என அந்த அதிகாரி தெரிவித்தார்.

