மஹியங்கனை தெய்கொல்ல பகுதியில் உள்ள வீடொன்றை காட்டு யானை தாக்கியதில் வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் 68 வயதுடைய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 23 வயதுடைய மரணித்த பெண்ணின் பேத்தி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இலக்கம் 4 குடகலயாய தெய்கொல்ல வீட்டையே இன்று (19/07/2023)அதிகாலை 4.00 மணியளவில் காட்டு யானை தாக்கியதாகவும் மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேதம் தற்போது மஹியங்கனை வைத்தியசாலையின் பிரேத வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா

