கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை கெலனி தமிழ் வித்தியாலயத்தில் 13 மாணவர்கள் ஓரே நேரத்தில் மயக்கமுற்ற நிலையில் உடனடியாக கரவனல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பம் இன்று (21)மதியம் இடம்பெற்றுள்ளது.
குறித்து மாணவர்கள் ஏன் மயக்கமுற்றனர் என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
யூகேஷ்

