மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.24.07.2023.
இச்சம்பவம் பொகவந்தலாவ பொலிஸ் பிரிவில் உள்ள செபல்டன் தோட்ட எஸ்.பி . பிரிவில் நேற்று 23.07.2023.அன்று இரவு எட்டு மணிக்கு 15 வயது உடைய சிறுமி தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
இது குறித்து பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில் சிறுமியின் சகோதரி ஏசியதால் அவர் இவ்வாறு செய்துள்ளார் எனவும் இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என கூறினார்.
சிறுமியின் உடலம் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

