பண்டாரவளை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் கொஸ்லாந்தை பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கொஸ்லாந்தை அளுத்வெவ அம்பகொல்ல ஆர மற்றும் நெவ்வார ஆகிய பகுதிகளில் மூன்று கஞ்சா தோட்டங்களை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதில் 12 அடி உயரமான 1800 கஞ்சா செடிகளும், 10 அடி உயரமான 1650 கஞ்சா செடிகளும்,பயிரிடுவதற்கு ஆயத்தமான நிலையில் தவரணையில் பயிரிடப்பட்டிருந்த அரை அடி உயரயரமான 15000 கஞ்சா செடிகளையும் பண்டாரவளை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் 5000 மில்லி லீற்றர் கள்ளச்சாராயம் (கசிப்பு) மீட்கப்பட்டுள்ளதுடன் 42,28,50 வயதுகளையுடைய பாலாறுவ, ரன்மல்வின்ன,புத்தல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரை கைது செய்துள்ளதுடன், குறித்த சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பண்டாரவளை பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ராமு தனராஜா
