சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
சீரற்ற காலநிலை காரணமாக, ஹட்டன், டிக்கோயா, நோர்வூட், பொகவந்தலாவை, கொட்டகலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதேவேளை, குறித்த பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து, மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது உடமைகளில் பெரும்பாலானவற்றை இழந்து பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில், நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு, நாளை (05) ஹட்டன் கல்வி பணிமனைக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
