லிந்துலை பொது வைத்தியசாலைக்கு மருந்தக காகித உறைகள் அன்பளிப்பு.
லிந்துலை பொது வைத்தியசாலையின் மருந்தக பயன்பாட்டிற்காக ஒரு தொகை காகித உறைகள் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
ஹோல்புறூக் ரிபப்லிகன் சர்வதேச பாடசாலையின் (Republican International School) அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய குழுவினர் இன்று லிந்துலை மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி அவர்களை சந்தித்து மேற்படி மருந்தகப் பாவனைக்கான காகித உறைகளை கையளித்துள்ளார்கள்.
முதற்கட்டமாக ஆயிரத்து நூறு காகித உறைகள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் தொடர்சசியாக இச்செயற்றிட்டத்தினை கொண்டுசெல்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாவும் பாடசாலை மட்டத்தில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதே வேளை அக்கரப்பத்தனை மற்றும் டயகம பிரதேசத்திலுள்ள பொது வைத்தியசாலைகளுக்கும் மருந்தக தேவைக்கான காகித உறைகள் அடங்கிய பொதிகள் ஹோல்புறூக் ரிபப்லிகன் சர்வதேச பாடசாலையினால் அண்மையில் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பாடசாலை மாணவர்களின் ஓய்வுநேரப்பயன்பாட்டுடன் கூடிய சுயதிரன்கள் மற்றும் சுற்றாடல் பராமரிப்புடன் கூடிய இரசணை உணர்வுகள் போன்றவற்றை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ப்பட்டுவரும் மேற்படி செயற்றிட்டத்தினை வைத்தியசாலை மற்றும் பொது சுகாதார மட்டத்தில் பெரிதும் வரவேற்கத்தக்காதாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

