கண்டியில் இரண்டாம் நாள் பெரஹராவின் போது ஊர்வலத்தில் சென்ற யானைகள் குழப்பம் செய்ததால் பெரஹராவை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் அங்கும் இங்கும் ஓடியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து பார்வையாளர்கள் உயிரை காப்பாற்ற ஏரியில் குதித்த நிலையில், அவர்கள் காவல்துறையினர், உயிர்காப்புக் குழுவினர் மற்றும் கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.
இரண்டு யானைகளும் தலதா வீதி வழியாக ஓடியபோது யானை ஒன்று குயின் ஹோட்டலின் தாழ்வாரத்தில் புகுந்து இடையூறு ஏற்படுத்தியபோது, அதை கட்டுப்படுத்த முயன்றுள்ளனர்.
இடையூறு ஏற்படுத்திய இரண்டு யானைகளை அகற்றிய பிறகு, ஏற்பாட்டுக் குழுவினர் ஊர்வலத்தை தொடர்ந்து முன்னெடுத்திருந்தனர்.
எனினும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

