யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தகெட்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 01/5
கந்தகெட்டிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் உமாஓய ஆற்றில் மீன் பிடிக்க தனது நண்பர்களுடன் சென்று மீண்டும் வீடு திரும்பும்.போது பத்தாகல. காட்டு பகுதியில் வைத்து யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தாக கந்தகெட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தனர்
இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகவும் உயிர்யிழந்தவர் 42வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை கந்தகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
