மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.28.08.2023.
நோட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள கிரிவன்நெலிய கிராம மக்கள் மாலை 6 மணிக்கு மேல் வெளியே நடமாட முடியாத நிலையில் உள்ளதாகவும் அப் பகுதியில் புலி நடமாட்டம் அதிகரித்துள்ளது எனவும், தங்கள் வளர்ப்பு நாய்கள் அனைத்தையும் பிடித்து சென்று விட்டது என கூறுகின்றனர்.
அப்பகுதி வன பகுதியாக உள்ளதால் அதிக அளவில் புலி நடமாட்டம் உள்ளதை கண்ட அக் கிராம மக்கள் இது குறித்து வன பாதுகாப்பு அதிகாரிகள் உடன் கவணம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
