கடந்த ஏழு நாட்களாக மஸ்கெலியா நூக்குவத்தை தனியார் கம்பெனிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொரஸ் தோட்ட தொழிலாளர்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ‘கணபதி,நகுலேஸ்வரன் தெரிவித்தார்.
அட்டன் தொழிலாளர் தொழில் நீதிமன்றில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இத்தீர்வு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது மஸ்கெலியா நூக்குவத்தை தோட்ட மக்களின் சுமார் 10 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இன்று தோட்ட முகாமையாளர் ,தொழிலாளர் தேசிய சங்கத்தின் காரியாலய உத்தியோகஸ்தர்கள்,தொழிற்சங்க தோட்ட தலைவர்கள் தொழிலாளர்கள் முன்னிலையில் இடம் பெற்ற பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.
