டி சந்ரு
அட்டன் கொழும்பு பிரதான வீதியின் கடவலை பகுதியில் மரமொன்று வீழ்ந்துள்ளமையினால் குறித்த வீதியின் போக்குவரத்து நேற்று சுமார் 1 மணித்தியாலம் முற்றாக தடைபட்டிருந்த நிலையில் வீதி அதிகார சபையினரும் போலீசாரும் மற்றும் பொதுமக்களும் இணைந்து மரத்தை அகற்றிய பின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
