மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.03.09.2023.
இன்று 157 வது பொலிஸ் தினத்தையொட்டி இன்று ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் இரத்த தானம் நிகழ்வு ஒற்றை ஹட்டன் வலய பொலிஸ் அத்தியட்சகர் நிபுன தெஹி ஹம அவர்கள் மேற்கொண்டார்.
நிகழ்வு இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள வைத்திய அதிகாரிகள் மேற்கொண்டனர்.அதிகமானோர் இரத்த தானம் செய்தனர்.
சேகரிக்கப்பட்ட இரத்தம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள இரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் கடந்த வெள்ளிக்கிழமை 157 வது பொலிஸ் தினத்தையொட்டி ஹட்டன் இஸ்லாமிய பள்ளி வாசலில் சமய நிகழ்வுகள் ஹட்டன் வலய பொலிஸ் அதிகாரி நிப்புண தெஹி ஹம அவர்களினால் மேற் கொள்ள பட்டது.
இன்று மேலும் ஒரு சமய நிகழ்வு ஹட்டன் மானிக்க பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்றது.
பௌத்த கிறித்தவ ஆலயங்களில் நுவரெலியா மாவட்ட பொலிஸ் அதிகாரி தலைமையில் நுவரெலியாவில் இடம் பெறும் என ஹட்டன் வலய பொலிஸ் அதிகாரி நிப்புண தெஹி ஹம அவர்கள் தெரிவித்தார்.










