வெளிவந்துள்ள உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி நு/ தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்களில் பொறியியல் பீடதுக்கு 05 மாணவர்களும் மருத்துவ பீடதுக்கு 02 மாணவர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்னர்.
கணித, விஞ்ஞான பிரிவுகளில் இருந்து 61 மாணவர்கள் பரிட்சையை எதிர்கொண்டு 38 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இது தலவாக்கலை தமிழ் மகா வித்தியால வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும்.
கணித, விஞ்ஞான பிரிவுகள் மட்டுமின்றி முகாமைத்துவ பீடத்துக்கு 05 மாணவர்களும் சட்ட பீடத்திற்கு ஒரு மாணவரும் பொறியியல் தொழில்நுட்ப பிரிவு ஒரு மாணவரும் மொத்தமாக வர்த்தக பிரிவில் 06 மாணவர்களும், கலை பிரிவில் 16 மாணவர்களும்,பாடசாலை உயர்தர பிரிவில் மொத்தமாக 60 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேலை செட் புள்ளி தீர்மானத்தின்படி பல்கலைக்கழக வாய்ப்பினை மேலும் சில மாணவர்கள் பெறக்கூடிய சந்தர்ப்பமும் காணப்படுகின்றது.
இந்த சிறப்புமிக்க பெறுபேற்றை பெற்றுக் கொள்வதற்கு வழிகாட்டிய அதிபர் மற்றும் பிரதி அதிபர் பகுதி தலைவர்கள் அயராது உழைத்த பாட ஆசிரியர்கள் சிறப்புமிக்க மாணவர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஆலோசனை வழிகாட்டல் வழங்கிய வலயக்கல்வி பணிப்பாளர், கோட்டக்கல்வி பணிப்பாளர் உதவி கல்வி பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் பாடசாலை சமூகம் சார்பாக அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் கல்வியால் சமூகத்தை உயர்த்துவோம்.
மேலும் ஆங்கில மொழி சித்து வீதம் 95 ஆக காணப்படுகின்றது.

