எதிர்வரும் 15 ஆம் திகதி நாடளாவிய ரீதியாக இடம்பெறவுள்ள புலமை பரிசில் பரீட்சைக்கு நமது பாடசாலையிலிருந்து தோற்றவுள்ள மாணவர்களை தயார்படுத்தி அவர்களது அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் மஸ்கெலியா சென். ஜோசப் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் மூலமாக மாதிரி பரீட்சை ஒன்று கடந்த முதலாம் திகதி (01/10/)ஏற்பாடு செய்யப்பட்டு இன்றைய தினம் பாடசாலையில் நடாத்தப்பட்டது.
சிறுவர் தினமான இன்று மாணவர்களை ஊக்கப்படுத்த அனைத்து மாணவர்களுக்கும் சிறியளவிலான கற்றல் உபகரணங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் அவர்களை மகிழ்விக்க சிறுவர் பூங்காவிற்கும் அழைத்து செல்லப்பட்டிருந்தனர்.
இந்நிகழ்வு பழைய மாணவர் சங்கத்தின் கல்வி குழுவின் தலைவர் திரு.எஸ்.ராஜவீரன் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து சிறப்பான முறையில் திட்டமிடப்பட்டு பழைய மாணவர் சங்கத்தின் தலைவரும் சென்.ஜோசப் கல்லூரியின் அதிபருமான என்.பரமேஸ்வரன் ஐயா தலைமையில், செயற்குழு மற்றும் கல்வி குழு பங்குபற்றலுடன் சிறப்பாக நடாத்திமுடிக்கப்பட்டது.
இப்பரீட்சைக்கான மாதிரி வினாத்தாளை நமது பழைய மாணவர் சங்க கல்வி குழுவிலுள்ள ஆசிரியர் சண்முகராஜ் சதீஷ்குமார் அவர்கள் பழைய மாணவர் சங்கம் சார்பாக வடிவமைத்திருந்தார்.
மேலும் இந்நிகழ்விற்கு மஸ்கெலியா பிரதேச சபை உத்தியோகத்தர்களும் தங்களது பங்களிப்பை வழங்கியிருந்தார்கள்.
இந்த பணியை சிறப்பாக முன்னெடுக்க பங்களிப்பு செய்த ஆரம்ப பாடசாலை நிர்வாகம் உட்பட அனைவருக்கும் பழைய மாணவர் சங்க செயலாளர் என்ற வகையில் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
நன்றி
செயலாளர்
ச.ஹெரோசன் குமார்






