சர்வாதிகாரம் ஒரு சங்கிலி போன்றது சங்கிலி திரும்பினால் சவுக்கடி தான்.
என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ்.
தொடரும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் அத்துமீறி அகற்றுவதும் விவசாய நிலங்களை சீர்குலைக்கும் செயற்பாடுகளில் பெருந்தோட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றது.
நாட்டின் பொருளாதாரத்தின் பங்குதாரர்களுக்கு இலாப பங்கீடு வழங்காமல் ஏமாற்றியும் நிறை அளவை குறைத்து ஊதியத்தின் அளவை குறைக்க நினைக்கும் பகல் கொள்ளைக்காரர்களாக மாறிக் கொண்டு வரும் தோட்ட நிர்வாகங்கள் தோட்ட மக்களின் குடியிருப்புகளில் அத்துமீறி தோட்டத் தொழிலாளர்களை தாக்கி விவசாய நிலங்களுக்கு சேதத்தை விளைவிக்கும் பெருந்தோட்ட நிர்வாகம் என்ற பெயரில் ரவுடித்தனம் செய்யும் கயவர் கூட்டம் கேகாலை மாவட்டம் அரநாயக்க பிரதேச சபைக்கு உட்பட்ட அபதேனிய தோட்ட பிரிவிலும் மனிதாபிதானமற்ற ரீதியில் நடந்து கொண்டிருக்கிறது,
பொறுமை கடந்து விட்டது மாத்தளை, காவத்தையை தொடர்ந்து இன்று அபதேனியவிலும் முறையற்ற ரீதியில் பெருந்தோட்டங்களில் சர்வாதிகார ஆட்சி நடத்த நினைக்கும் பெருந்தோட்ட நிறுவனங்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் மாறுங்கள் இல்லையேல் மாற்றப்படுவீர்கள். அடங்க மறுக்கும் அடாவடி குதிரைக்கு கடிவாளம் போடும் காலம் வந்து விட்டது.என்று ஊடகங்களுக்கு கருத்துரைத்தார்.
