மஸ்கெலியா விசேட நிருபர்.
மத்திய மலைநாட்டில் இன்று காலை முதல் கனத்த மழை பெய்து வருகிறது.
இதனால் நீர் தேக்கங்களில் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து உள்ளது.
குறிப்பாக மவுசாகல, காசல்ரீ, மேல் கொத்மலை, கென்யோன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய, கலுகல, ஆகிய அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டும் அதன் கொள்ளளவை எட்டியது.
கென்யோன் நீர் தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டும் 3 அங்குலம் திறந்து விட பட்டு உள்ளது.
இதனால் தாழ் நிலப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர் மின் நிலைய அதிகாரி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் மவுசாகல நீர் தேக்கத்தின் நீர் மட்டும் அதன் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது எந்த நேரத்திலும் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றம் செய்ய படலாம் ஆகையால் களனி கங்கையை அன்டி உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் தற்போது இந்த பகுதியில் கனத்த மழை பெய்து வருவதால் நீர் வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சாமிமலை ஓயா, சியத்த கங்குல ஓயா, மறே ஓயா, காட்மோர் ஓயா மற்றும் ஏனைய சிற்றாறு கள் அனைத்தும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
நீர் மின் நிலையங்களில் அனைத்து மின் இயந்திரங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யும் பணியில் நீர் மின் நிலைய அதிகாரிகள் முன் வந்து உள்ளனர்.
கன மழையுடன் கினிகத்தேன நுவரெலியா ஏ-7 வீதியில் பணி மூட்டம் அதிகளவில் காணப்படுவதால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு ஹட்டன் வலய போக்குவரத்து பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
