Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நவோதயா சிட்னி ஓணம் 2026 விழாவில் பங்கேற்ற  ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட சங்கம்..

August 6, 2026

கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

August 6, 2026

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

August 6, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நவோதயா சிட்னி ஓணம் 2026 விழாவில் பங்கேற்ற  ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட சங்கம்..
சினிமா

நவோதயா சிட்னி ஓணம் 2026 விழாவில் பங்கேற்ற  ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட சங்கம்..

ThanaBy ThanaAugust 6, 2026Updated:August 6, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நவோதயா சிட்னி ஓணம் 2026 விழாவில் பங்கேற்ற  ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட சங்கம்..

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இயங்கி வரும் நவோதயா அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற “நவோதயா சிட்னி ஓணம் 2026” விழா, கேரளத்தின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் சமூக ஒற்றுமையை கொண்டாடிய சிறப்புமிக்க கலாசார நிகழ்வாக கடந்த ஆகஸ்ட் 2 ஆம் திகதி ரீஜென்ட்ஸ் பார்க் ஸ்ரீ துர்க்காதேவி கோயில் மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ் திரைப்பட சங்கம் ஆஸ்திரேலியா (TFAA) சார்பில் தயாரிப்பாளரும் நடிகருமான Shelvin Das மற்றும் TFAA அணித் தலைவர் மற்றும் பொதுத் தொடர்பு அலுவலருமான Ravi Anandarajah ஆகியோர், ஏற்பாட்டுக் குழுவின் அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

அரசியல், சமூக மற்றும் கலாசாரத் துறைகளைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த விழா, பல்வேறு கலைநிகழ்ச்சிகள், பாரம்பரிய நிகழ்வுகள் மற்றும் போட்டிகளுடன் உற்சாகமாக நடைபெற்றது.

நிகழ்வின் ஒரு பகுதியாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் விருதுகளை வழங்குவதற்காக TFAA பிரதிநிதிகள் மேடைக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். திறமைகளை அங்கீகரித்து பாராட்டும் இந்த வாய்ப்பு, தமிழ் திரைப்பட சங்கம் ஆஸ்திரேலியாவிற்கு பெருமை சேர்த்ததாக அமைந்தது.

மேலும், TFAA உறுப்பினரும் “காட்டெருமை” திரைப்படத்தின் நடிகையுமான Sujitha, நிகழ்வின் ஒருங்கிணைப்பு பணிகளில் ஏற்பாட்டுக் குழுவுடன் இணைந்து முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார். அவரது அர்ப்பணிப்பான சேவையை TFAA பாராட்டியதுடன், நிகழ்வின் வெற்றிக்கு அவர் வழங்கிய ஒத்துழைப்பிற்கும் நன்றியைத் தெரிவித்துள்ளது.

நிகழ்வை சிறப்பாக திட்டமிட்டு வெற்றிகரமாக முன்னெடுத்த நவோதயா சிட்னி ஓணம் 2026 ஏற்பாட்டுக் குழுவினருக்கும், தன்னார்வலர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் தமிழ் திரைப்பட சங்கம் ஆஸ்திரேலியா தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் வாழும் தமிழ் மற்றும் மலையாள சமூகங்களுக்கிடையேயான கலாசார ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்த இந்த நிகழ்வில் TFAA-வின் பங்கேற்பு, ஆஸ்திரேலியாவில் தென்னிந்திய கலை மற்றும் திரைப்படத் துறைகளுக்கிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

io

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரி!-இலங்கைக்கு 10% வரி

    July 24, 2026

    செல்வின் தாஸ் தயாரிப்பில், அசோன்வே பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘க்ரே’ திரைப்படத்தில், பிரபல இந்தி மற்றும் ஹாலிவுட் நடிகர் வருண் திவாரி இணைந்துள்ளார்* 

    July 20, 2026

    ஜோர்தான், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!

    July 13, 2026

    நியூசிலாந்தில் முதியவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இலங்கை நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

    July 7, 2026
    Editors Picks

    நவோதயா சிட்னி ஓணம் 2026 விழாவில் பங்கேற்ற  ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட சங்கம்..

    August 6, 2026

    கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026

    விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் 2027 வரவுசெலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்

    August 6, 2026

    நவோதயா சிட்னி ஓணம் 2026 விழாவில் பங்கேற்ற  ஆஸ்திரேலியா தமிழ் திரைப்பட சங்கம்..

    August 6, 2026

    கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் – பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

    August 6, 2026

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் -இந்திய உதவித் தூதுவரிடம் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் கோரிக்கை

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.