இன்று (20) முதல் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி கிடைத்துள்ளது என அறிவித்துள்ளது.
இதன்படி, மின்சாரத்தைப் பயன்படுத்தும் அலகுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப திருத்தப்பட்ட கட்டணங்கள் எவ்வாறு அதிகரிக்கப்படும் என்பது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்றைய தினம் (20) அறிக்கையொன்றை வெளியிடவுள்ளது.
மின்சாரக் கட்டணங்களின் சதவீத அதிகரிப்பு தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
