மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள் 21.10.2023.
ஹட்டன் கொழும்பு பழைய வீதியில் உள்ள ஸ்ரேதன் தோட்ட பகுதியில் மான் வேட்டையாடி வாகனத்தில் கொண்டு செல்வதாக ஹட்டன் பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு அதிகாரி ஜயசிங்க அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவல்களை தொடர்ந்து, அப் பகுதியில் பொலிசார் வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அப்போது வாகனத்தில் மான் ஒன்றை வேட்டையாடி உயிர் அற்ற நிலையில் முழுமையாக கொண்டு சென்ற மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும் நாளை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக குற்றத்தடுப்பு பிரவின் அதிகாரி ஜயசிங்க தெரிவித்தார்.

