மஸ்கெலியா விசேட நிருபர்.
காசல்ரீ நீர் தேக்கத்தில் குறித்த பகுதியில் வழமையாக நன்னீர் மீன் பிடிக்கச் சென்றவர்கள் நேற்று மாலை நீர் தேக்கத்தில் வலையை குறித்த பகுதியில் போட்டு விட்டு வந்துள்ளனர்.
இன்று காலை சென்று பார்க்கும் போது வழமைப்போல மீன் பிடிக்கும் நபர் வலையை இழுத்துள்ளார். விரிக்கப்பட்ட வலையை இழுக்கும் போது அதிக எடை காணப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அருகில் நின்றவர்களுடன் சேர்ந்து இழுக்கும் போது வலையில் பாரிய மலைப்பாம்பு சிக்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றுள்ளனர்.
இது வரை காலமும் இவ்வாறான ஒரு சம்பவம் நிகழ்ந்த தில்லை எனவும் இன்றே இவ்வாறு கண்டுள்ளதாகவும் சிறுவதிலிலிருந்து மீன்பிடித் தொழில் ஈடுபடும் மீன் வலைக்கு சொந்தக்காரர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மலைப்பாம்பை நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
வலையில் சிக்கிய மலைப்பாம்பு உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
