மஸ்கெலியா நிருபர்.
மத்திய மலைநாட்டில் தொடர் மழையால் காசல்ரீ, மேல் கொத்மலை, மவுசாகல, நீர் தேக்கத்தின் நீர் நிரம்பிய நிலையில் அதன் கரையோர பகுதியில் அதிகளவில் உக்கும், உக்கா பிலாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் வந்து குவிந்துள்ளது.
மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்திற்க்கு நீரை வழங்கும் பிரதான கங்கைகளான சாமிமலை ஓயா, சியத்த கங்குல ஓயா, மறே ஓயா காட்மோர் ஓயா, மற்றும் ஏனைய சிற்றாறு கள் பகுதியில் இருந்து அதிகளவில் உக்கும் ,உக்கா பிலாஸ்டிக் பொருட்கள் நீர் தேக்கத்தின் வெள்ளத்தில் வந்து பல இடங்களில் காணப்படுகிறது.
அதேபோல் காசல்ரீ நீர் தேக்கத்திற்க்கு நீரை வழங்கும் பிரதான கங்கைகளான கெசல்கமு ஓயா, போடைஸ் ஓயா ஆகிய கங்கையில் அதிகளவில் குப்பைகள் வந்து நிறைந்து உள்ளது காசல்ரீ நீர் தேக்கத்தில்.
டயகம பகுதியில் இருந்து வரும் கங்கை மேல் கொத்மலை நீர் தேக்கத்தை வந்து சேரும் போது அப் பகுதியில் உள்ள குப்பைகள் மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் கரையோர பகுதியில் அதிகளவில் காணப்படுகின்றன.
இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நன்னீர் மீன்பிடி தொழில் புரிவோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வருகின்றனர்.


