மஸ்கெலியா நிருபர். செ.தி.பெருமாள்.13.11.2023.
தீபாவளி திருநாளை முன்னிட்டு ஹட்டன் நகரில் எங்கு பார்த்தாலும் தற்காலிக வர்த்தக நிலையங்கள் அமைக்கபட்டு வர்த்தகம் இடம்பெற்று வருகிறது.

இவ்வாறான காலகட்டத்தில் நகரில் பல்வேறு இடங்களில் உக்கும் உக்கா பிலாஸ்டிக் குப்பைகள் குவிந்துள்ளது.
இதனால் நகருக்கு வரும் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
அது மட்டும் அல்லாமல் ஹட்டன் நகரில் உள்ள ஏனைய குடியிருப்பு பகுதியில் உள்ள வீதிகளிலும் இவ்வாறான குப்பைகளை காணக்கூடியதாக உள்ளது.
ஹட்டன் நகர சபை அகற்றிய போதும் அதிக அளவில் ஊழியர்கள் இனைக்கவில்லை, ஆதலால் நகர், நகரில் உள்ள ஏனைய குடியிருப்பு பகுதி சுத்தம் செய்யும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என நகர் வர்த்தகர்கள் மற்றும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


