வி. தீபன்ராஜ்
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நுவரெலியா பங்களாஹாத்த பகுதியில் நேற்று நள்ளிரவு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் இப்பாதை ஊடான வாகனப் போக்குவரத்து தடைபட்டிருந்ததாகவும், பின்னர் காவல்துறையினரும், இராணுவத்தினரும், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் இணைந்து வீதியில் சரிந்துள்ள மண், மரம் மற்றும் கொடி, செடிகளை அகற்றி ஒரு வழிப் போக்குவரத்தாக மாற்றினர்.
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடை மழையால் ஆங்காங்கே மண்சரிவு அனர்த்தங்கள் இடம்பெற்று வருகின்றன.
