கல்வியமைச்சின் அழகியல் பிரிவினால் அகில இலங்கை கர்நாடக சங்கீத மற்றும் பரதநாட்டிய போட்டிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களைக்கொண்ட பாடசாலைகளுக்கிடையில் கனிஷ்ட இடைநிலைப்பிரிவு பெண்களுக்கான தனி வாத்தியம் வீணை போட்டி நிகழ்ச்சியில் பது/ சரஸ்வதி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவியான செல்வி. A ஹம்சி இரண்டாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் ஊவா வானொலி சேவையின் சிரேஷ்ட அறிவிப்பாளரான திரு. அசோக் மற்றும் பது/ பசறை தமிழ் தேசியக்கல்லூரியின் சங்கீத ஆசிரியை திருமதி பவானி ராமசந்திரன் தம்பதியினரின் புதல்வியுமாவார்.
இதே போட்டித்தொடரில் சிரேஷ்ட இடைநிலைப்பிரிவில் பங்கு பற்றிய செல்வி G. சம்ரக்ஷினி நான்காம் இடத்தை பெற்றுள்ளார்.
இருவருக்கும் எமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.இதனை வழிநடத்திய அதிபர், மற்றும் நெறிப்படுத்திய ஆசிரியர்களான திரு. M.F.M இர்ஷாட் மற்றும் திருமதி.குமுதினி கணேசமூர்த்தி ஆகியோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
ராமு தனராஜா

