மஸ்கெலியா நிருபர்.
மஸ்கெலியா சாமிமலை பெரிய சோளங்கந்த தோட்டத்தில் அம்மன் ஆலயத்தில் அம்மன் சிலைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தங்க தாலி, தாலி மனி போன்ற சுமார் 95000/_ரூபாய் பெறுமதி மிக்க குறித்த ஆபரணங்கள் களவாடப்பட்டுள்ளது.
இது குறித்து நேற்று ஆலய நிர்வாக சபைக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து தோட்ட பொதுமக்கள் ஆலயத்தின் முன்பாக அணி திரண்டனர். இது குறித்த பல்வேறு கோணங்களில் ஆராய பட்டதை தொடர்ந்து குறித்த ஆலயத்தின் பூசகர் ஆபரணங்களை அடமானம் வைத்திருப்பது தெரியவந்தது.
குறித்த நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டு ஆபரணங்களை மீட்டு தருவதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
குறித்த விடயம் சம்பந்தமாக இன்று (22) மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
