Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

August 11, 2026

”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

August 11, 2026

நோர்வூட் அயரபி தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 11 பேர் வைத்தியசாலையில்

August 11, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » “MISS UNIVERSE TAMIL SRILANKA- 2023“ மகுடத்தை சூடினார் நிவேதிதா.
இலங்கை

“MISS UNIVERSE TAMIL SRILANKA- 2023“ மகுடத்தை சூடினார் நிவேதிதா.

ThanaBy ThanaNovember 24, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இத்தனை வருடங்களும் இலங்கையில் தமிழ் யுவதிகளுக்கான மணப்பெண்களுக்கான போட்டிகள் மாத்திரமே நடாத்தப்பட்டு வந்த நிலையில், முதற்தடவையாக தமிழ்ப் பெண்களுக்கான அழகு இராணிப் போட்டியாக MISS UNIVERSE TAMIL SRILANKA நடாத்தப்பட்டது.

அது மிகவும் சிறப்பாகவும் பிரமாண்டான முறையிலும் இந்த மாதம் 17ஆம் திகதி கொழும்பு- மெரினா பீச் ஹோட்டலில் நடாத்தப்பட்டது.

இப்போட்டியில் நாடு முழுவதிலுமிருந்து 100க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றதுடன், இதன் முதற்கட்ட தேர்வுகள் மட்டக்களப்பில் இரண்டாம் கட்ட தேர்வுகள் வவுனியாவில் மூன்றாம் கட்டத் தேர்வுகள் யாழ்ப்பாணத்திலும் அரையிறுதி மற்றும் இறுதிக்கட்ட தேர்வுகள் கொழும்பு- மெரீனா பீச் ஹோட்டல் மற்றும் குளோபல் டவர் ஹோட்டலில் இரண்டு மாதங்களுக்கு முன்னரே நடைபெற்றிருந்தன.

இதன்போது முதற்கட்டமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, கேகாலை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களிலிருந்து 120 யுவதிகள் தெரிவு செய்யப்பட்டு அதிலிருந்து 30 யுவதிகள் இரண்டாம் கட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த 30 பேருக்குமான பல்வேறு பயிற்சிகள் கொழும்பில் சில வாரங்கள் நடத்தப்பட்டதுடன் இதிலிருந்து 15 பேர் இறுதிப் போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டனர்.

குறித்த 15 பேரில் MISS UNIVERSE TAMIL SRILANKA- 2023 மகுடத்தை வவுனியாவைச் சேர்ந்த நிவேதிதா ராசையா சூடிக்கொண்டார்.

இரண்டாமிடத்தை மாத்தளையைச் சேர்ந்த ஐஸ்வர்யா, மூன்றாவது இடத்தை கொழும்பைச் சேர்ந்த விதுசா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இறுதிப் போட்டிக்கு தெரிவான 15 யுவதிகளிலிருந்து Miss Best Hair, Miss Best Skin, Miss Best Congeniality, Miss fitness, Miss Personality, Miss Photogenic, Miss popularity, Miss Telent, Miss top model ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இறுதிப் போட்டியின் நடுவர்களாக திருமதி.திவ்யா சுஜேன், திருமதி. சத்யபிரியா ரட்ணசாமி, திருமதி .சர்மிளா தர்மேந்திரா, திருமதி .அனுசா ராஜ்மோகன், திருமதி.ப்ரியா சங்கர் ஆகியோர் பங்காற்றியிருந்தனர்.

இந்நிகழ்வு Karan Kailayar – Founder ( Can Lanka (Pvt) Ltd), Akila Baskaran (Vice President) , W.Vijendran (Event Director), – Maan Vizhi (National Director ) Tymeron Carvalho (Choreographer) ஆகியோரால் சிறப்பாக ஒழுங்கமைப்பு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு அனைவரது பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வை தமிழ் மொழியில் பிரசன்னா பத்மநாதனும் ஆங்கிலத்தில் கம்யா விஜேதாச ஆகியோர் சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கியிருந்தனர்.

ஒரு நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு அனுசரணையாளர்களின் பங்களிப்பு மிக மிக அவசியமாகும். அந்த வகையில் “MISS UNIVERSE TAMIL SRILANKA- 2023“ நிகழ்வை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க அனுசரணையாளர்களின் பங்களிப்பு பக்கபலமாகக் காணப்பட்டது.

அந்த வகையில் ADRIAN SOLAR GREEN, AETRAM GROUP OF COMPANIES, ADRIAN GROUP, HERBALMOON BEAUTY, RM MOVIES, SHRINGAAR KANISHKA SANGABO DIAS EXCLUSIVE DESIGNER WEAR, MANJU LOGES, PREMI’S BRIDAL & BEAUTY SALON, KS COSMETICS, LITTLE ASIA, JOY GLORIOUS, WEDDING TALLS MAGAZINE, NAQ, MYRUS, NAADI ஆகிய நிறுவனங்கள் வழங்கியிருந்ததுடன் ஊடக அனுசரணையை வீரசேகரி, ஆதவன் தொலைக்காட்சி மற்றும் தமிழ் எப்.எம் என்பன வழங்கியிருந்தன.

தகவல்

வி.விஜேந்திரன் (Event Director)

07773030301

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காக 635 மில்லியன் ரூபாய் செலவில் சீர்திருத்த நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி

    August 11, 2026

    11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறை!

    August 11, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார். 

    August 11, 2026

    சீரானது குடிவரவுத் திணைக்கள கணினி அமைப்பு: கடவுச்சீட்டு விநியோகப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

    August 11, 2026
    Editors Picks

    அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

    August 11, 2026

    ”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

    August 11, 2026

    நோர்வூட் அயரபி தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 11 பேர் வைத்தியசாலையில்

    August 11, 2026

    போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காக 635 மில்லியன் ரூபாய் செலவில் சீர்திருத்த நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி

    August 11, 2026

    அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

    August 11, 2026

    ”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

    August 11, 2026

    நோர்வூட் அயரபி தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 11 பேர் வைத்தியசாலையில்

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.