Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

August 11, 2026

”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

August 11, 2026

நோர்வூட் அயரபி தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 11 பேர் வைத்தியசாலையில்

August 11, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » குறைந்த வருமானம் பெறுபவர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு 1,996 வீடுகள் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம்
இலங்கை

குறைந்த வருமானம் பெறுபவர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு 1,996 வீடுகள் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம்

ThanaBy ThanaNovember 28, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

குறைந்த வருமானம் பெறுபவர்கள், படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு 1,996 வீடுகள் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் சீன அரசின் உதவியுடன் ஒப்பந்தம் கைச்சாத்தானது.

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும், சீன அரசாங்கத்தின் சார்பாக இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஷென்ஹோங்வும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு  (27) பத்தரமுல்ல, நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மூன்றாண்டுகளில் நிர்மாணிக்கப்படும் இந்த 1,996 வீடுகளில் 1,888 வீடுகள் கொழும்பில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கும், 108 வீடுகள் இந்நாட்டு படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் ஒதுக்கப்படும்.

இதன்படி, பேலியகொடை துட்டுகெமுனு வீதியில் 615 வீடுகளும், தெமட்டகொட எழுமடுவ தோட்டத்தில் 586 வீடுகளும், மொரட்டுவ பெட்டரி தோட்டத்தில் 575 வீடுகளும், மஹரகம அம்பவத்தையில் 112 வீடுகளும், கொட்டாவ பழத்துருவத்தையில் 108 வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளன. கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக 108 கொட்டாவ பழத்துருவத்தை வீடுகள் ஒதுக்கப்படவுள்ளன.

இந்த திட்டத்திற்கு சீன அரசு 552 மில்லியன் யுவான் நிதி உதவி வழங்குகிறது. இது இலங்கை நாணயத்தில் ஏறத்தாழ 24.48 பில்லியன் ரூபாவாகும்.

புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னர், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இந்த வீடுகளின் நிர்மாணப்பணிகள் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நாட்டில் வீடுகளை நிர்மாணிப்பதற்காக சீன அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுவது இது முதல் மற்றும் கடைசி முறையல்ல என சுட்டிக்காட்டிய அமைச்சர் இந்நாட்டு மக்களின் சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு சீனா எப்போதும் நிவாரணம் வழங்க முன்வருவதாக அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் சார்பில் சீன ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்த அமைச்சர், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை விரிவுபடுத்துவதற்கு இத்திட்டங்கள் உதவும் எனவும் சுட்டிக்காட்டினார். சீனா எப்போதும் இலங்கையின் நண்பன். இலங்கை எதிர்கொள்ளும் ஒவ்வொரு இக்கட்டான சூழ்நிலையிலும் சீன அரசாங்கம் இலங்கைக்கு நெருங்கிய நண்பராக ஆதரவளித்து வருவதாகவும், மூன்று தசாப்த கால யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் இலங்கைக்கு சீனா எப்போதும் துணை நின்றதாகவும் அவர் கூறினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஷென்ஹோங், இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்கு சீனா எப்போதும் ஆதரவளிப்பதாக வலியுறுத்தினார். சீன மானியத்தின் கீழ் இலங்கை மக்களின் பொருளாதார மற்றும் சமூக நிலையை மேம்படுத்த 100 க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு சீனா பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய தூதுவர், கடந்த காலங்களில் இலங்கை எதிர்கொண்ட பயங்கரவாத யுத்தம், கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி இலங்கைக்கு தன்னால் இயன்றவரை ஆதரவளித்துள்ளதாகவும் வலியுறுத்தினார். சீனா இலங்கையின் நல்ல அயல்நாடு மற்றும் நெருங்கிய நண்பன் என சுட்டிக்காட்டிய தூதுவர், இலங்கை மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்த சீனா உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ். சத்யானந்த, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத், அதன் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர மற்றும் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

முனீரா அபூபக்கர்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காக 635 மில்லியன் ரூபாய் செலவில் சீர்திருத்த நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி

    August 11, 2026

    11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறை!

    August 11, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார். 

    August 11, 2026

    சீரானது குடிவரவுத் திணைக்கள கணினி அமைப்பு: கடவுச்சீட்டு விநியோகப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

    August 11, 2026
    Editors Picks

    அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

    August 11, 2026

    ”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

    August 11, 2026

    நோர்வூட் அயரபி தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 11 பேர் வைத்தியசாலையில்

    August 11, 2026

    போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காக 635 மில்லியன் ரூபாய் செலவில் சீர்திருத்த நிலையம் அமைக்க அமைச்சரவை அனுமதி

    August 11, 2026

    அஸ்வெசும கொடுப்பனவு ஊழல் மோசடி தொடர்பில் சுயாதீனமான விசாரணை அவசியம்.  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் 

    August 11, 2026

    ”திட்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த 144 வழிபாட்டுத்தலங்களைப் புனரமைப்பதற்காக 232.07 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

    August 11, 2026

    நோர்வூட் அயரபி தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 11 பேர் வைத்தியசாலையில்

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.