பசறை அமைப்பாளர் பதவியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நீக்கப்பட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் வாக்களித்தமையினால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய பசறை அமைப்பாளராக லட்சுமணன் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய பசறை அமைப்பாளராக நியமிக்கப்பட்ட லட்சுமணன் சஞ்சய், சஜித் பிரேமதாசவிடம் இருந்து அவருக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
