இன்றைய தினம் நு/தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் நீர் தேவையினை பூர்த்தி செய்யும் முகமாக Cargill’s கொத்மலை நிறுவனத்தின் சரூ பிம சமூக நலத்திட்டம் நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக நீர் விநியோகத் திட்டத்தினை உத்தியோகபூர்வமாக பாடசாலை அதிபரிடமும் ,மாணவர் சமூகத்திற்கு கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
பெறுமதியான இத்திட்டத்திற்காக 10 லட்சம் ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டது. காகிஸ் நிறுவனத்தின் பால் சேகரிப்பு பிரிவிற்கான பிரதானியின் ஊடாக இத்திட்டம் திறந்து வைக்கப்பட்டு மரம் நடுகை நிகழ்வின் மூலமாக கையளிக்கப்பட்டது.
தேசிய நீர் வடிகால் அமைப்பு சபையிலிருந்து பெறப்படுகின்ற பாடசாலையின் தேவைக்கான நீர் கட்டணமாக மாதம் ஒன்றுக்கு 35 ஆயிரம் தொகைக்கு மேல் இதுவரை செலவு செய்யப்பட்டுள்ளது.
இலவசமாக கிடைக்கக்கூடிய நீர் வளத்தை பெற்று எவ்வாறு பாடசாலையின் தேவையை நிறைவேற்ற முடியும் என அருமையான திட்டத்தினை அதிபர் அவர்கள் முன் வைத்த போது இந்த பாடசாலையினுடைய பழைய மாணவரும் கொத்மலை பால் நிறுவனத்தின் பொறியியல் பிரிவிற்கு பொறுப்பாளரும் திரு அன்பழகன் ஊடாக இத்திட்டம் எமது பாடசாலைக்கு கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக குழுவாக இணைந்து அவருடன் செயல்பட்ட அனைத்து அதிகாரிகளையும் கௌரவிக்கும் முகமாகவும் இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக எமது கோட்டம் இரண்டின் கோட்டக்கல்வி பணிப்பாளர் திருவாளர் எஸ் ஜெகதீஸ்வரன் ஐயா அவர்களும் கலந்து நீர் பாவனை தொடர்பாக நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றியும் பாடசாலையின் பல முகாமைத்துவம் பற்றியும் சிறப்புரையாற்றியிருந்தார் இதன் பின்னர் இடம்பெற்ற நிகழ்ச்சிகளில் எமது பாடசாலை மாணவர்களின் உடைய கலை நிகழ்வுகள் என்பவற்றோடு பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் உடைய உறுப்பினர்களால் பாடசாலையினுடைய பழைய மாணவர் சங்கத்தின் உடைய உறுப்பினர்களால் காகில்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது,
இதன் போது இந்நீர் திட்டத்தை எமக்கு அளித்தமைக்காக பாடசாலையினுடைய அதிபர் திருவாளர் R. கிருஷ்ணசாமி ஐயா, பிரதி அதிபர் திருமதி M. ரோஹினி அம்மையார், உதவி அதிபர் திருவாளர் T.ஜெகதீஸ்வரன் அவர்களால் ஞாபக சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்விற்காக நியமிக்கப்பட்ட ஏற்பாட்டு குழு தங்களது பணியினை செவ்வனே செய்து நிகழ்ச்சியினை சிறப்பாக நெறிப்படுத்தி நெறியாள்கை செய்தமைக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவினருக்கும், Cargill’s கொத்மலை நிறுவனத்தின் இந்த உன்னத செயற்பாட்டுக்காக பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.



















