.
1997 ம் ஆண்டு ஹய்பொரஸ்ட் பிரதேசத்தில் தனது கல்விச்சேவையை ஆரம்பித்து மேலும் சென்லெனாட்ஸ் மற்றும் மஹாஊவ பாடசாலைகளில் பல்வேறு மாணவர்களை புலமைப்பரிசில் பரீட்சையிலும் ,க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையிலும்,உயர்தரத்திலும் சித்திபெற செய்தவர்.
அனெகமானோரை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாக அரும்பணியாற்றியவர். கடந்த சில வருடங்களாக இருதய நோயினால் பாதிப்புற்று இருந்த போதிலும் தனது இறுதி மூச்சுவரை பாடசாலை சமூகத்தினரோடும் மாணவ செல்வங்களோடும் இருந்து அவர்களிற்கான சேவையை வழங்கிய நேரத்திலேயெ தன்னுயிரை அர்ப்பணித்த அமரர் .கிருஸ்ணசாமி கமலஹாசன் ஆசிரியரின் செல்வப்புதல்வி கமலஹாசன் சாருக்ஷினி இன்று வெளியாகிய க.பொ.த.சாதாரணப் பரீட்சையில் சென்லெனாட்ஸ் பாடசாலையில் 9A சித்திகளைப்பெற்று பாடசாலையில் முதலிடம் பெற்றுள்ளார்.தனது தந்தையின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த கமலஹாசன் சாருக்ஷினிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சுரேஷ்

