கொழும்பு கண் வைத்தியசாலையில் இன்று (14) காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார அமைச்சின் செயலாளருடனான கலந்துரையாடலின் பின்னர் அடையாள வேலைநிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
